Monday, May 31, 2010

புகையிலை எதிர்ப்பு தினம்

இன்று புகையிலை எதிர்ப்பு தினம்: சிகரெட் விற்பனையை நிறுத்திய சென்னை வியாபாரிகள் கடைகளில் “போர்டு” தொங்கவிட்டனர்
சென்னை, மே 31-

புகை பிடிக்கும் பழக்கம் இளைஞர்களிடையே அதி கரித்து வருகிறது. சிகரெட் மட்டுமின்றி போதையில் தள்ளாட செய்யும் புகையிலை பொருட்களையும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதனால் புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் சிறு வயதிலேயே ஏற்பட்டு மரணத்தை தழுவு கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் மே 31-ந்தேதி புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக் கப்படுகிறது. இந்த நாளில் புகையிலை பொருட்களை பயன்படுத்தினால் என் னென்ன தீங்கு ஏற்படும் என்பதை விளக்கும் விழிப் புணர்வு பிரசாரங்களும் இன்று சென்னையில் நடத்தப்பட்டன.
வியாபாரிகள்
புகையிலைக்கு எதிரான இந்த விழிப்புணர்வு போராட்டத்தில் சென்னை வியாபாரிகளும் இன்று தங்களை இணைத்துக் கொண்டனர். சென்னையில் இன்று 1 லட்சம் வியாபாரிகள் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனையை நிறுத்தினர்.
வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் இதனை தெரிவித்தார். இது தொடர் பாக அவர் கூறும் போது, இன்று ஒரு நாள் மட்டும் புகையிலை பொருட்கள் விற்பனையை நிறுத்தியதால் வியாபாரிகளுக்கு லட்சக் கணக் கில் நஷ்டம் ஏற்பட்டுள் ளது.
இதனை பொருட் படுத்தா மல் மனமுவந்து புகையிலை எதிர்ப்பு பிரசாரத்தில் வியா பாரிகளும் பங்கேற் றுள்ளனர் என்றார். கடைகள் முன்பு சிகரெட் விற்பனை இல்லை என்ற போர்டுகளும் தொங்கவிடப்பட்டிருந்தன. மயிலாப்பூர் பகுதியில் லஸ்கார்னர், மந்தைவெளி சிக்னல், சிட்டி சென்டர் உள்ளிட்ட பகுதிகளில் பெரிய பேனர்களையும் வியாபாரிகள் கட்டியுள்ள னர். மயிலாப்பூர் வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் மாரிதங்கம் மற்றும் வியாபாரிகள் தங்களது கடைகள் முன்பு சிறிய அளவிலான பேனர்களையும் கட்டியிருந்தனர்.

No comments:

Post a Comment