Sunday, June 20, 2010

புதிய எம்.பி. VS NEW MP

புதிய எம்.பி.,க்களில் குபேரர் மல்லையா : 38 பேர் சொத்து மதிப்பு ரூ.1,285 கோடி

print e-mail   Buzz  Share  
 
பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010,23:26 IST

புதுடில்லி : சமீபத்தில் ராஜ்ய சபா எம்.பி.,யாக தேர்வாகியுள்ளவர்களில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 615 கோடி ரூபாய் சொத்து உள்ளது. தற்போது தேர்வாகியுள்ள ராஜ்ய சபா எம்.பி.,க்களின் மொத்த சொத்து மதிப்பு ஆயிரத்து 285 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது.

ராஜ்ய சபாவுக்கு 50க்கும் அதிகமான உறுப்பினர்கள் தற்போது தேர்வாகியுள்ளனர். இவர்களின் 38 எம்.பி.,க்களின் சொத்து மதிப்பை ஜனநாயக தேர்தல் சீர்திருத்த தேசிய கூட்டமைப்பு என்ற தொண்டு அமைப்பு சேகரித்து வெளியிட்டுள்ளது. ராஜ்யசபாவுக்கு தற்போது தேர்வாகியுள்ள எம்.பி.,க்களில் 38 பேரின் மொத்த சொத்து மதிப்பு 1,285 கோடி ரூபாய்க்கும் அதிகம் என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.இதில், தமிழக எம்.பி.,க்கள் குறித்த தகவலை இந்த அமைப்பு இதில் சேர்க்கவில்லை.ராஜ்ய சபா எம்.பி.,க்களில் அதிக சொத்து மதிப்பு உடையவர், "கிங் பிஷர்' விமான நிறுவன அதிபரான விஜய் மல்லையா. இவருடைய சொத்து மதிப்பு 650 கோடி ரூபாய், என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தடவை தேர்வானவர்களில் குபேரராக முதலிடத்தில் இருக்கிறார்.

இவருக்கு அடுத்தபடியாக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., சத்திய நாராயண சவுத்ரி. இவருக்கு 190 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி., கன்வர் தீப்புக்கு 82 கோடி ரூபாய் சொத்து உள்ளது.மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்வாகியுள்ள அனில் தவே தான் மிகக்குறைந்த சொத்துள்ள எம்.பி.,யாக கருதப்படுகிறார்.இவர், தனக்கு இரண்டு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அளவுக்கு தான் சொத்து உள்ளதாக கணக்கு காட்டியுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி., ராம் க்ருபால் யாதவ் 27 லட்சத்துக்கு சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரபல வக்கீலான ராம் ஜெத்மலானி, ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்வாகியுள்ளார். இவரது சொத்து மதிப்பு 29.60 கோடி ரூபாய். மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, பஞ்சாப் மாநிலத்திலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவரது சொத்து மதிப்பு 17 கோடி ரூபாய். மூத்த காங்கிரஸ் தலைவர் ஆஸ்கார் பெர்னாண்டசுக்கு 15 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது.பாரதிய ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு, கர்நாடகாவிலிருந்து தேர்வாகியுள்ளார். இவருக்கு ஏழு கோடியே 72 லட்ச ரூபாய் அளவுக்கு சொத்து உள்ளது.

பீகாரிலிருந்து தேர்வாகியுள்ள பா.ஜ.,வின் ராஜிவ் பிரதாப் ரூடிக்கு 4.40 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது. உத்தர பிரதேசத்திலிருந்து தேர்வாகியுள்ள பா.ஜ., செயலர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு இரண்டு கோடியே 61 லட்ச ரூபாய்க்கு சொத்து உள்ளது.சத்திஸ்கர் மாநிலத்திலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள மோஷினா கித்வாய்க்கு இரண்டு கோடியே 20 லட்ச ரூபாய் சொத்து உள்ளது. லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு சொத்து உள்ளதாம்.ஆந்திராவிலிருந்து தேர்வாகியுள்ள மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் 61 லட்ச ரூபாய் சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment