Wednesday, November 24, 2010

பிப்ரவரி மாதம் தமிழக மேல்சபை தேர்தல்

டிசம்பர் 29-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல்: பிப்ரவரி மாதம் தமிழக மேல்சபை தேர்தல்; ஆயத்த பணிகள் மும்முரம் Chennai புதன்கிழமை, நவம்பர் 24, 3:36 PM IST முந்தைய பதிவுகள் 3


இமெயில் பிரதி திரைப்படம் சென்னை, நவ. 24-



தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மேமாதம் நடக்கிறது. அதற்கு முன்னதாக தமிழக மேல்சபை தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.



78 உறுப்பினர்களை கொண்ட மேல்சபையில் பட்டதாரி தொகுதிகளில் இருந்து 7 உறுப்பினர்களும், ஆசிரியர்கள் தொகுதியில் இருந்து 7 உறுப்பினர்களும், தேர்ந்தெடுக்கப்பட வேண் டும். இதற்காக பட்டதாரி தொகுதிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிகள் வரையறை செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



தில் திருத்தங்கள் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் டிசம்பர் 29-ந்தேதி வெளியிடப்படுகிறது. இதை தேர்தல் கமிஷன் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.



வருகிற பிப்ரவரி மாதத் தில் மேல்சபை தேர்தலை நடத்துவது என்று தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.



பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளில் இருந்து 14 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக் கப்படுவதுடன் உள்ளாட்சி மன்ற தொகுதிகளில் இருந்து 26 உறுப்பினர்களும், சட்டசபை தொகுதியில் இருந்து 26 உறுப்பினர்களும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படு வர். 12 உறுப்பினர்களை நியமன முறையில் மேல்சபை உறுப்பினர்களாக கவர்னர் நியமிப்பார்.



சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட இருப்பவர்களை எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும். 26 உறுப்பினர்கள் சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதால் 9 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தால் மேல்சபைக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க முடியும்.



உள்ளாட்சி தொகுதிகளை பொறுத்த வரை மாவட்ட ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய உறுப்பினர்கள், மாநகராட்சி, நகராட்சி உறுப்பினர்கள், பேரூராட்சி மன்றத்தலைவர்கள் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள்.



பிப்ரவரி மாதம் தமிழக மேல்சபை தேர்தலை நடத்து வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகிறது. புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலக வளாகத்தில் மேலவை கூடம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

No comments:

Post a Comment